2025 ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் திருத்தாது என்று அறிவித்துள்ளது.
இந்த தகவலை லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் அறிவித்தார்.
கடந்த மே மாதத்திலும் விலைகள் மாறாமல் இருந்தன.
ஏப்ரல் மாத திருத்தத்தின் போது, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.420 அதிகரித்து ரூ.4,100 ஆகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆகவும் இருந்தது.
இதேவேளை, ஜூலை மாதத்திற்கான விலை திருத்தத்தை லிட்ரோ கேஸ் எரிவாயு நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.















