குழந்தைகளைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக அரசாங்கம் இரண்டு மாதங்களில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், உலகம் முழுவதும், குழந்தைகள் மத்தியில் புற்றுநோயை ஏற்படுத்தும் அன்றாட பிளாஸ்டிக் பயன்பாடுகளின் விளைவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
உள்ளூர் சந்தையில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக அதிக ஆபத்துள்ள விடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதனால், பல அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து, அடுத்த இரண்டு மாதங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.