போர்த்துக்கல் சர்வதேச வீரரும், லிவர்பூல் கழக வீரருமான டியோகோ ஜோட்டா (Diogo Jota) வியாழக்கிழமை (03) ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
28 வயதான அவர் வடமேற்கு ஸ்பெயினின் ஜமோரா பகுதியில் உள்ள பலாசியோஸ் டி சனாப்ரியா அருகே A-52 நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவரது சகோதரரும் 26 வயதான தொழில்முறை கால்பந்து வீரருமான ஆண்ட்ரே பிலிப்பும் இந்த கார் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்ப அறிக்கைகளின்படி, ஜோட்டாவும் அவரது சகோதரரும் லம்போர்கினியில் இருந்தபோது, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும்போது காரின் டயர் வெடித்தது.
இதனால் கார் சிறிது நேரத்திலேயே வீதியை விட்டு விலகி தீப்பிடித்து எரிந்தது, இதன் விளைவாக இரு சகோதரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜூன் 22 அன்று போர்டோவில் நடைபெற்ற ஒரு விழாவில் ஜோட்டா தனது நீண்டகால காதலியான ரூட் கார்டோசோவை திருமணம் செய்தார்.
திருமணத்தின் புகைப்படங்கள் தம்பதியினர் தங்கள் மூன்று குழந்தைகளுடன் கொண்டாடுவதைக் காட்டுகின்றன.
ஜோட்டா தனது கால்பந்து வாழ்க்கையை போர்ச்சுகலில் உள்ள பாவோஸ் டி ஃபெரீராவுடன் தொடங்கினார், பின்னர் 2016 இல் அட்லிகோ மாட்ரிட்டுக்கு மாறினார்.
அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் கழகத்தில் இணைந்து கொண்டார்.
இறுதியாக லிவர்பூல் கழகத்துக்கு இணைந்து கொண்டார்.