பிரபல போலிபூட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கிய புராண இதிகாசத் திரைப்படமான ராமாயணத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் இன்று (03) வெளியிடப்பட்டது.
இது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.
இந்த படத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரன்பீர் கபூர் ராமராக முன்னணி வேடத்தில் நடிக்கிறார், யாஷ் ராவணனாக நடிக்கிறார்.
சன்னி தியோல் ஹனுமனாக நடிக்கிறார், சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார்.
ரவி துபே லட்சுமணனாக நடிக்கிறார்.
ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகையாக நடிக்கிறார், விவேக் ஓபராய் வித்யுத்ஜிஹ்வாவாக நடிக்கிறார்.
இந்த வெளியீட்டு நிகழ்வானது ஒன்பது இந்திய நகரங்களில் பல திரையிடல்களுடன் கொண்டாடப்பட்டது.
இந்த படம் கதைசொல்லல் மற்றும் காட்சி மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கில் ராமன், ராவணின் அழியாத கதையை உலகிற்கு மீண்டும் எடுத்துக் காட்டுகிறது.
இந்த திட்டத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இரண்டு பகுதிகளை உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தின் முதல் பகுதி 2026 தீபாவளியின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதி 2 2027 தீபாவளியில் தொடர்ந்து வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.