ராகமை, படுவத்தை பகுதியில் நேற்றிரவு (03) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவின் நெருங்கிய நண்பரான “ஆர்மி உபுல்” என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பாதிக்கப்பட்ட நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான போட்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து ராகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














