2025 ஜூன் மாத்திற்கான சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வீரரர்களில் இலங்கை அணியின் பத்தும் நிஸ்ஸங்கவும் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை அணியின் தொடக்க வீரர் தவிர ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களில் இருவரான ககிசோ ரபாடா மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோரும் உள்ளடங்குவர்.
பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரை வென்ற ஆட்டத்தில், பத்தும் நிசங்க தொடர்ச்சியாக சதங்களை அடித்து நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றை சிறப்பாகத் தொடங்கினார்.
காலியில் நல்ல துடுப்பாட்ட சூழ்நிலையில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களை எடுத்த பின்னர், இலங்கையின் இன்னிங்ஸில் நிஸ்ஸங்க 187 ஓட்டங்களை எடுத்தார்.
இரண்டாவது டெஸ்டிலும் தனது திறனை தொடர்ந்து கொண்டு வந்த நிசங்க, மீண்டும் ஆட்டத்தில் சதம் அடித்தார்.
அவர் தனது இன்னிங்ஸில் 19 பவுண்டரிகளுடன் 157 ஓட்டங்களை எடுத்தார்.
இது பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ள உதவுயது.




















