என்விடியா (Nvidia)வின் பங்குச் சந்தை மதிப்பு வியாழக்கிழமை (10) முதல் முறையாக 4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வர்த்தக அமர்வை முடித்தது.
செயற்கை நுண்ணறிவை (AI) இயக்கும் தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரிப்பால் நிறுவனம் தொடர்ந்து பயனடைந்து வருவதால், சிப் தயாரிப்பாளரின் பங்குகள் புதன்கிழமை 2.4% வரை உயர்ந்து $164 ஆக அதிகரித்தன.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2023 ஜூன் மாத்தில் முதல் முறையாக $1 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டியது.
அதன் பின்னர் அதன் சந்தை மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிரமடைந்து வரும் கட்டணப் போரால் உலகளாவிய சந்தைகள் பாதிக்கப்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதத்தில் என்விடியாவின் பங்கு விலை கணிசமாகக் குறைந்தது.
ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் குறித்த கவலைகள் நீங்கவில்லை என்றாலும், வசந்த காலத்திலிருந்து அதன் பங்கு விலை வலுவாக வளர்ந்து இந்தப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, என்விடியாவின் பங்கு அதன் தற்போதைய விலையில் 1% க்கும் குறைவாகவே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















