இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் மூன்று ஆக்சியன்-4 மிஷன் குழுவினரை சுமந்து வந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், செவ்வாய்க்கிழமை (15) இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவிலான திட்டமிடப்பட்ட நேரத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கியது.
அதன்படி, குறித்த குழுவினர் சான் டியாகோ கடற்கரையில் பசுபிக் பெருங்கடலில் பிற்பகல் 3:01 மணியளவில் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் தரையிறங்கி, வரலாற்று சிறப்புமிக்க ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) பணியை முடித்தனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமி திரும்புவதற்கு விண்கலம் சுமார் 22 மற்றும் அரை மணி நேரம் ஆனது.
அந்தக் குழு 18 நாட்கள் ISS இல் தங்கி குறைந்தது 60 சோதனைகளை நடத்தியது.
டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் மணிக்கு 27,000 கிமீ வேகத்தில் பறந்தபோது ஷுக்லா மற்றும் அவரது குழுவினர் – கமாண்டர் பெக்கி விட்சன் (அமெரிக்கா), ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி (போலந்து), மற்றும் திபோர் கபு (ஹங்கேரி) – பாராசூட்களை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டனர்.
சுபன்ஷு சுக்லா தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுற்றுப்பாதையில் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மாவின் 1984 பயணத்திற்குப் பின்னர் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த பணியில் அவர் பங்கேற்பது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு பெரிய முன்னேற்றமாகவும், நாட்டின் வரவிருக்கும் ககன்யான் திட்டத்திற்கான ஒரு படிக்கல்லாகவும் கருதப்படுகிறது.
















