நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இன்று (16) சென்னையில் உள்ள சூப்பர் ஸ்டாரின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது அன்பு நண்பரும் சகாவுமான ரஜினிகாந்தை சந்தித்தார்.
சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்துடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் இந்த சந்திப்பு வந்துள்ளது.
ஜூன் மாதம் திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

















