பேலியகொட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து ஒரு T-56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள், ஒரு மெகசின் மற்றும் 5 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
குறித்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், பின்னர் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.
மேலும், அவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்காக துப்பாக்கியுடன் வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














