வரலாற்று சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹரா திருவிழாவின் முதல் கும்பல் பெரஹரா இன்று (30) இரவு நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 4 ஆம் திகதி வீதிகளில் வலம் வர திட்டமிடப்பட்டுள்ள ரந்தோலி பெரஹரா தொடங்குவதற்கு முன்னதாக இன்று ஆரம்பமாகும் கும்பல் பெரஹரா தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடைபெறும்.
ஊர்வலத்தைக் காண கண்டிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரும் பெளர்ணமி தினத்தன்று பிரமாண்டமான ரந்தோலி பெரஹரா நடைபெறும்.
எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு கண்டி நகரில் இன்று முதல் 9 ஆம் திகதி வரை சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்காக 6,000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் முப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க தெரிவித்தார்.



















