பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்கலாக, நாட்டின் மொத்த ஏற்றுமதிகள், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 10.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த தொகையானது 6.8 சதவீத வளர்ச்சியை காட்டுவதாகவும் மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதிகளை விட இறக்குமதிகளில் உயர்ந்தளவு வளர்ச்சியொன்றினை பதிவு செய்துள்ளது.
தனியார் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக, வாகன இறக்குமதிகள் ஜூன் மாதத்தில் 163 மில்லியனாக அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதனால், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வாகன இறக்குமதிகள் 475 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது.
2025 ஜூன் மாதத்திலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன பிரதான ஏற்றுமதி நாடுகளாகத் தொடர்ந்தும் காணப்படுவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














