அஸ்வின் குமாரின் “மகாவதர் நரசிம்ஹா” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
விஷ்ணுவின் தீவிர பக்தர் பிரஹ்லாதனின் காவியக் கதையை விவரிக்கும் இந்த அனிமேஷன் புராண திரைப்படம் நரசிம்ம அவதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.
ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குள் 91.25 கோடி இந்திய ரூபாவை வசூலித்துள்ளது.
இந்த படம் தற்போது இந்தியாவின் அதிக வசூல் செய்த அனிமேஷன் படமாக உருவெடுத்துள்ளது.
உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ‘ஸ்பைடர் மேன்’ மற்றும் ‘குங் ஃபூ பாண்டா’ போன்ற சர்வதேச அனிமேஷன் திரைப்படங்களை முந்தியுள்ளது.
Sacnilk.com இன் தரவுகளின்படி, இதன் உலகளாவிய வசூல் 112 கோடி இந்திய ரூபாவாக உள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியிடப்பட்ட இந்தப் படம், தெலுங்கு 3D பதிப்பில் குறிப்பாக வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து க்ளீம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘மஹாவதர் நரசிம்ஹா’ திரைப்படம், விஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையமாகக் கொண்ட ஒரு இலட்சிய சினிமா தொடரின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
‘மஹாவதர் பரசுராம்’ மற்றும் ‘மஹாவதர் கல்கி’ போன்ற திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் ஏற்கனவே தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.



















