சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்சதேச ஒருநாள் கிரிக்கெட்டின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலை சர்சதேச கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரினை தொடர்ந்து சர்சதேச கிரிக்கெட் சபை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ஓட்டங்களை மட்டுமே பெற்று 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும், இந்திய அணி வீரர் விராட் கோலி 4ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன் 10வது இடத்தை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டீஸ் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















