முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (26) இடம்பெறவுள்ளது.
உடல்நிலை குறைப்பாடு காரணமாக ரணில் விக்ரமசிங்க இன்று நேரில் முன்னிலையாக மாட்டார் என்றும், தேவைப்பட்டால் ஜூம் மூலம் நடவடிக்கைகளில் கலந்து கொள்வார் என்றும் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ரணிலின் விடுதலை மற்றும் அரசாங்கத்திற்ககு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றார்.
அவர் அரசாங்கத்திற்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தும் போராட்டக்காரர்களுடன் இணைந்தார்.
வழக்கு மீண்டும் தொடங்கும் போது அமைதியை ஏற்படுத்த நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.
பேரணிகள் காரணமாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.















