அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் சஜாரி ஸ்வஜ்டாவை( Zachary Svajda) வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் (Novak Djokovic) மற்றும் லொய்ட் ஹாரிசை வீழ்த்தி டெய்லர் பிரிட்ஸ்ம் 3வது சுற்றுக்கு தகுதிப்பெற்றனர்.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டா பலப்பரீட்சை நடாத்தினார்.
இதில் ஆரம்ப முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் மற்றும் ஸ்வஜ்டா ஆகியோர் மாறி மாறி புள்ளிகளை பெற்றுக்கொண்டனர் இறுதியில் முதல் செட்டை ஜோகோவிச் போராட்த்தின் பின் 6-7 தனதாக்கினார். பின்னர் பொறுப்புடன் விளையாடிய அவர் அதன்பிறகு அடுத்தடுத்து 3 செட்களையும் முறையே 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று ஒட்டுமொத்தமாக 6-7,6-3, 6-3, 6-1 மூன்றாவது கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் (Taylor Fritz )4-6, 7-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் லொய்ட் ஹாரிசை (Lloyd Harris)வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.



















