சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு இருபது ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்திற்காக சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த அணியில் அறிமுக வீரர்களான விஷேன் ஹெலம்பகே மற்றும் கமில் மிஷார ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் பெத்தும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, நுவனிது பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லாலகே, மஹிஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷா பத்திரதான ஆகியோரும் அணியில் அடங்கியுள்ளனர்.
இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணம் நாளை முதல் ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் T20 தொடர் செப்டம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட சிம்பாப்வே அணியை சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















