அடுத்த வாரம், உலகளவில் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முழு சந்திர கிரகணம் தெரியவுள்ளது.
இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு வான நிகழ்வாக அமையும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
TimeAndDate.com தகவலின்படி, 2025 செப்டம்பர் 7, அன்று தோன்றும் இந்த கிரகணம், பகுதி கிரகணங்களைப் போலல்லாமல், முழு சந்திர கிரகணம் நிலவினை அடர் சிவப்பு நிறமாக மாற்றும்.
இது பெரும்பாலும் “Blood Moon” என்று குறிப்பிடப்படுகிறது.
முழு சந்திர கிரகணத்தின் போது, பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து வரும் சூரிய ஒளி, சிதறி, சந்திரனில் சிவப்பு நிறமாக பிரதிபலிக்கிறது.
அதனால் அந்த நேரத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.
ஆசியாவின் பெரும்பகுதி, கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் முழுமையான சந்திர கிரகணம் தெரியும்.
அதேநேரம், ஆப்பிரிக்காவின் ஏனைய பகுதிகள், அவுஸ்திரேலியா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் பிரேசிலின் கிழக்கு கடற்கரையின் சில பகுதிகளுக்கும் சந்திர கிரகணம் தெரியும்.
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த வான நிகழ்வு, 82 நிமிட முழுமையான கட்டத்துடன் உச்சத்தை எட்டும்.
அப்போது பூமியின் பாரிய நிழல் சந்திரனின் முழு பக்கத்தையும் சிவப்பு நிற இருளில் மூழ்கடிக்கும்.



















