நியூயோர்க்கின் ஆர்தர் ஆஷே அரங்கில் திங்கட்கிழமை (01) நடந்த அமெரிக்க ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் 23 ஆவது நிலை வீரரான அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இத்தாலிய உலகின் முதல் நிலை வீரரான சின்னருக்கு இந்த ஆட்டத்தை முடிப்பதற்கு வெறும் 81 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இந்த வெற்றியின் மூலமாக நான்கு முறை முக்கிய சாம்பியனான சின்னர், ஹார்டு-கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தனது வெற்றிக் கணக்கை 25 போட்டிகளாக நீட்டித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் பட்டத்தின் நடப்பு சாம்பியன் சின்னர் ஆண்டின் தொடக்கத்தில், உடல்நலக்குறைவினால் சின்சினாட்டி ஓபன் இறுதிப் போட்டியில் இருந்து விலகினார்.
சின்னர் இப்போது செவ்வாய்க்கிழமை (02) நடைபெறும் காலிறுதிப் போட்டியில் சக இத்தாலிய லோரென்சோ முசெட்டியுடன் விளையாடுவார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் விம்பிள்டனை வென்ற சின்னர், மேலும் தனது கிராண்ட்ஸ்லாம் பட்ட கணக்கினை அதிகரிக்க இதன்போது முயல்வார்.
















