டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாகும்.
இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும் எலோன் மஸ்கின் வீழ்ச்சிக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.














