2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹெங்கொங் அணியை வீழ்த்தியது.
அபுதாபி, ஷேக் சயீத் மைதானத்தில் நடந்த இப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் தலைவர் லிட்டன் தாஸ் அரைசதம் விளாசினார்.
நடப்பு ஆசியக் கிண்ணத்தின் மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது, முதலில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுதடுத்தாடிய யாசிம் முர்தாசாவின் ஹெங்கொங் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை எடுத்தது.
கௌரவமான இலக்கை எட்ட, நிஜகத் கான் (42) மற்றும் யாசிம் முர்தாசாவின் (28) சிறப்பான துடுப்பாட்டம் உதவியாக இருந்தது.
பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பில் தாஸ்கின் அகமட், தான்சிம் ஹசன் சாகிப் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது 17.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
லிட்டன் தாஸ் 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்து அணியை வழிநடத்தினார்.
அதே நேரத்தில் டோஹித் ஹிரிடோய் (36 பந்துகளில் 35*) பங்களாதேஷ் 17.4 ஓவர்களில் 144/3 என்ற இலக்கை எட்ட உதவினார்.
ஹெங்கொங் சார்பில் பந்து வீச்சில் அதீக் இக்பால் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக லிட்டன் தாஸ் தெரிவானார்.
















