சினமன் லைஃப் வளாகத்தில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மறுத்தார்.
இந்தக் கூற்றுகள் தவறானவை என்றும், தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டவை என்றும், தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் தனது அதிகாரப்பூர்வ சொத்து வெளிப்படுத்தல்களில் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தவறான தகவல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக நஷ்ட ஈடு கோர சிவில் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும்,
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை தான் ஆதரிக்கும் அதே வேளையில், தீங்கு விளைவிக்கும் அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதற்கு அதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.














