முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியனான ரிக்கி ஹாட்டன் (Ricky Hatton) தனது 46 வயதில் காலமானார்.
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள அவரது வீட்டில் ஹேட்டன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரித்தானியாவின் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
குத்துச்சண்டை உலகம் அவரது இழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன.
2012 ஆம் ஆண்டு வியாசெஸ்லாவ் சென்சென்கோவிடம் தோல்வியடைந்ததிலிருந்து ஒரு தசாப்த கால ஓய்வுக்குப் பின்னர், டிசம்பர் மாதம் துபாயில் ஈசா அல் டாவுக்கு எதிராக ஒரு ஆச்சரியமான மறுபிரவேசப் போட்டி திட்டமிடப்பட்டதாக ஹாட்டன் அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், ஹாட்டன் லைட்-வெல்டர்வெயிட் மற்றும் வெல்டர்வெயிட்டில் உலக பட்டங்களை கைப்பற்றினார்.


















