பொறியியலாளர் தினமான இன்று” வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் பொறியியலாளர்கள் முக்கிய பங்களிப்பதாகக் கூறி இந்தியாவில் உள்ள பொறியியலாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்”
” இன்று பொறியியலாளர்கள் தினம். இந்த நாளில் இந்தியாவின் பொறியியலாளர் துறைக்கு அழியாத முத்திரை பதித்த சர் எம்.விஸ்வேஷ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
அனைத்துத் துறைகளிலும் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தீர்மானத்தின் மூலம் புதுமைப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து, கடினமான சவால்களை சமாளிக்கும் அனைவருக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் பொறியியலாளர்கள் முக்கிய பங்களிக்கின்றனர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

















