பாதாள உலகக் குழுத் தலைவரான பேக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேஷிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பெக்கோ சமனின் மனைவி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேகநபரை கொழும்பு தலைமை நீதவான் முன்பு ஆஜர்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து குறித்த நபரை இன்று (18) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பேக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அன்றைய தினம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.














