மீன்பிடி நடவடிக்கைக்கு கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
கல்பிட்டி, சின்னகுடியிருப்பு வாவியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு நபர்கள் திரும்பி வராதது தொடர்பாக நேற்று (22) கல்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.















