ஆசியக் கிண்ண வெற்றியை கிண்ணத்துடன் இந்தியா கொண்டாட அனுமதிக்காததற்காக இந்திய கிரிக்கெட் வாரிய (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (PCB) கடுமையாக சாடியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர் ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய சைகியா,
ஆசிய கிண்ணத்துடன் மொஹ்சின் நக்வி தனது ஹோட்டல் அறைக்கு ஓடிச் சென்றது விளையாட்டுத்தனமற்றது என்று கூறினார்.
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு, சம்பியனான இந்திய அணிக்கு வெற்றியாளர்களுக்கான பதக்கங்களும் கிண்ணத்தை வழங்கப்படாததால், பரிசளிப்பு விழாவில் சர்ச்சை எழுந்தது.
இதனால், அனைத்து பிரமுகர்களும் வெளியேறிய பின்னர், இந்திய அணி வெறுங் கைகளுடன் மேடையில் ஏறி, எந்தக் கிண்ணமோ அல்லது பதக்கங்களோ இல்லாமல் தங்களது வெற்றித் தருணத்தைக் கொண்டாடியது.
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ், தனது வாழ்க்கையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கிண்ணம் மறுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறினார்.

இந்தியா ஏன் மொஹ்சின் நக்வியைப் புறக்கணித்தது?
ஆசிய கிரிக்கெட் பேரரவையின் தலைவரான PCB தலைவரை சாய்கியா கடுமையாக சாடினார்.
மேலும் அவரது விளையாட்டுத் திறமையற்ற நடத்தையை சாடினார்.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் செயல்பட்ட ACC தலைவரிடமிருந்து கிண்ணத்தை வாங்க வேண்டாம் என்று BCCI ஆரம்பத்திலேயே முடிவு செய்திருந்ததாக அவர் வெளிப்படுத்தினார்.
“பாகிஸ்தானின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏசிசி தலைவரிடமிருந்து 2025 ஆசியக் கிண்ணத்தை நாங்கள் ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். அது ஒரு மனப்பூர்வமான முடிவு,” என்று சாய்கியா கூறினார்.
எமிரேட்ஸ் வாரிய துணைத் தலைவர் காலித் அல் ஜரூனியிடமிருந்து கிண்ணத்தைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைவோம் என்று இந்தியா ஏசிசியிடம் தெரிவித்திருந்தது.
இருப்பினும், அந்த கோரிக்கையை இந்திய அணிக்கு பதக்கங்களை வழங்க விரும்பிய மொஹ்சின் நக்வி நிராகரித்தார்.
கிண்ணத்துடன் தனது ஹோட்டலுக்கு விரைந்த நக்வி
இரு தரப்பினரும் ஒரு முட்டுக்கட்டைக்குள் சிக்கிய நிலையில், நக்வி மேடையை விட்டு வெளியேறி, பதக்கங்களையும் வெற்றியாளர்களின் கிண்ணத்தையும் எடுத்துச் செல்லுமாறு ACC அணிக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் நக்வியின் செயலை சாய்கியா கடுமையாக சாடினார், மேலும் போட்டிக்குப் பிறகு நேர்காணலில் அவரை கேலி செய்தார்.
“இது அவருக்கு கிண்ணத்தையும், பதக்கங்களையும் தன்னுடன் எடுத்துச் செல்லும் உரிமையை வழங்காது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் விளையாட்டுத் திறமையற்றது. கிண்ணத்தையும், பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
“இந்த நவம்பரில் துபாயில் ஒரு ICC மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது, அந்த மாநாட்டில், ACC தலைவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக மிகவும் தீவிரமான மற்றும் வலுவான எதிர்ப்பைத் தொடங்குவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
“இந்தியா அந்த நாட்டுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவரிடமிருந்து நாங்கள் கிண்ணத்தைப் பெறுவோம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது எங்களுடன் முரண்படும் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரிடமிருந்து கிண்ணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால் அந்த மனிதர் எங்கள் அணிக்கான கிண்ணத்தையும் மற்றும் பதக்கங்களையும் எடுத்துக்கொண்டு தனது ஹோட்டல் அறைக்கு எடுத்துச் செல்ல உரிமை உண்டு என்று அர்த்தமல்ல.
அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அவர் மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்.
இன்றைய பரிசு வழங்கும் விழாவின் போது அவரது நடத்தைக்கு எதிராக நாங்கள் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்வோம்,” என்று தெளிவுபடுத்தினார் BCC செயலாளர்.

இந்திய அணி நக்வியிடமிருந்து கிண்ணத்தை ஏற்காது என்று பிசிசிஐ ஏசிசிக்கு தெரிவித்திருந்தது ஏற்கனவே தெரிந்ததே.
அவரது கடுமையான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு மற்றும் முந்தைய ஆத்திரமூட்டும் கருத்துக்கள் என்பன இந்திய வீரர்களுக்கு அவரது பரிசளிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாததாக மாற்றியது.
முன்னதாக, ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியாவை கேலி செய்யும் வீடியோக்களை நக்வி பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்திய இராணுவத்திற்கும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவளித்ததற்காக சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி குற்றம் சாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















