2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டி (CWC25), குவஹாத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கமாகத் நேற்று (செப்.30) தொடங்கியது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடக்க ஆட்டம், எந்தவொரு மகளிர் உலகக் கிண்ண தொடக்க நாளிலும் பதிவு செய்யப்படதாத அதிகள பார்வையாளர்களை பெற்று, புதிய சாதனையை படைத்தது.
அதன்படி, குவஹாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு 22,843 ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இது எந்தவொரு மகளிர் உலகக் கிண்ணத்திலும் அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட குழு நிலை போட்டிக்கான சாதனையாகும்.
இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண குழு ஏ மோதலின் போது 15,935 பேர் கலந்து கொண்டதே சாதனையாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



















