ஒக்டோபர் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற வாரம் இன்று (07) தொடங்குகிறது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டில் ஊக்க மருந்து பயன்பாட்டிற்கெதிரான மாநாட்டு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
அதேநேரம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடுகள் நாளை (08) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாகவும் நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.
அதே வேளையில், வெள்ளிக்கிழமை 8 தனிநபர் பிரேரணைகள் விவாதிக்கப்படும்.















