ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி மற்றும் அபர்ணா முரளி இணைந்து நடித்த திரைப்படம் மிராஜ்.
இத் திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் திகதியன்று வெளியானது.
த்ரில்லர் பட பாணியில் உருவாகியிருக்கும் இத் திரைப்படம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் சோனி லிவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
மலையாள திரையுலகில் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் காட் பாதராக விளங்கும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்துள்ள மிராஜ் மீண்டும் ஜீத்துவை சஸ்பென்ஸ் திரில்லர் கதையின் கிங் ஆக நிரூபிப்பதாக அமைந்துள்ளது இந்த திரைப்படம்.
படத்தின் ஆரம்பத்திலேயே கிரன் என்பவர் தன் கம்பெனியின் டேட்டா-வை திருடிக்கொண்டு ட்ரெயினில் தப்பிக்கிறார். அப்படி தப்பிக்கும் போது அந்த இரயில் விபத்தில் அவர் இறக்கிறார்.
அதை தொடர்ந்து அவர் திருடிய டேட்டா அந்த கம்பெனி இல்லீகல் வேலையை எடுத்துள்ளார் என தெரியவர, கிரனின் காதலி அபர்னாவை போலிஸும், அந்த கம்பெனி அடியாளும் துரத்துகின்றனர்.
அவருக்கு எதுவும் தெரியவில்லை, அதே நேரத்தில் ஹீரோ ஆசிப் அலி ஒரு யூடியூப் வைத்து இது போன்ற விஷயங்களை தேடி அதை மக்கள் முன்பு கொண்டு வருபவர்.
அவர் அபர்னாவை தொடர்பு கொண்டு இதுக்குறித்து விசாரித்து, அந்த டேட்டா அடங்கிய Pen drive தற்போது எங்கே என தேடி செல்ல பல டுவிஸ்ட்-கள் அவிழ பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.


















