ராப் இசை கலைஞரான பாப் வைலன் உடனான நேர்காணலைத் தொடர்ந்து, The Louis Theroux Podcast ஊடகவியலாளருக்கான அனுசரணையை இங்கிலாந்தின் தேசிய விமான நிறுவனம்(BA) இடைநிறுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய பங்க் இரட்டையர்களில் ஒருவரான Pascal Robinson-Foster, குறித்த ஊடகத்திற்கு
அண்மையில் வழங்கிய ஒரு நேர்காணலில் ‘இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு மரணம்’ என்று கோஷமிட்டதற்காக தான் வருத்தப்படவில்லை “வருந்தப்படவில்லை” என்றும் தான் மீண்டும் அதை செய்வேன் என்று Theroux இடம் கூறினார்.
இது அரசியல் ரீதியாக உணர்திறன் அல்லது சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக இங்கிலாந்தின் தேசிய விமான நிறுவனம்(BA) யின் அனுசரணை கொள்கையை மீறுவதாக தெரிவித்து விளம்பரத்தை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை “தொடருக்கான எங்கள் அனுசரணை இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் மற்றும் விளம்பரமும் அகற்றப்பட்டுள்ளது எனவும் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
















