இந்தியாவின் விண்வெளி சார்ந்த தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் வகையில், மேம்பட்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை LVM-3 ரொக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
இந்த செயற்கைக்கோள் எதிர்வரும் நவம்பர் 2, அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படும்.
LVM3-M5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கெட், அதிநவீன CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை புவிநிலை இடமாற்று சுற்றுப்பாதையில் (GTO) நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
சுமார் 4,400 கிலோகிராம் எடையுள்ள CMS-03, இந்திய மண்ணில் இருந்து ஏவப்படும் மிக அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக அமையவுள்ளது.














