ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி:20 முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் சிம்பாப்வேயை எதிர்த்து பாகிஸ்தான் 05 விக்கெட் வித்தியாசத்தில் கடினமான வெற்றியைப் பெற்றது.
148 ஓட்டம் என்ற இலகுவான இலக்கை நோக்கித் துரத்திய பாகிஸ்தான் அணி இன்னிங்ஸில் பலமுறை நெருக்கடியில் சிக்கியது.
ஆனால், ஃபகர் ஜமான் (44), உஸ்மான் கான் (37*) மற்றும் மொஹமட் நவாஸ் (21) ஆகியோரின் முக்கிய பங்களிப்புகள் 04 பந்துகள் மீதமுள்ள நிலையில் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.
நேற்று (18) மாலை ஆரம்பமான இப் போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகா, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தார்.
சிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்களான பிரையன் பென்னட் (49) மற்றும் தடிவனாஷே மருமானி (30) விரைவான இணைப்பாட்டத்தை அமைத்து ஆரம்ப ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தித்தயது.
இதனால், சிம்பாப்வே எட்டு ஓவர்களில் 70 ஓட்டங்களை எடுத்தது.
இருப்பினும், பாகிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர்களை அறிமுகப்படுத்தியதும், சிம்பாப்வேயின் இன்னிங்ஸ் வியத்தகு முறையில் சரிந்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய சிம்பாப்வே அணி இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
148 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய துரத்தல் பாகிஸ்தானுக்கு எளிதாக இல்லை என்பதை நிரூபித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் சைம் அயூப் கவனமாக 27 ரன்கள் சேர்த்தாலும், திடீரென ஏற்பட்ட வியத்தகு சரிவால், பாபர் அசாம் (0) மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆகா (1) உட்பட மூன்று முக்கியமான விக்கெட்டுகளை விரைவாக இழந்தனர், 10வது ஓவரில் 54/4 என்ற நிலையில் சரிந்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் மொஹமட் நவாஸ் 2 விக்கெட்டுகளை அதிகபடியாக எடுத்தார்.
148 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிய துரத்தலானது பாகிஸ்தானுக்கு மிகவும் சிரமமாக மாறியது.
தொடக்க ஆட்டக்காரர்களான சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் சைம் அயூப் கவனமாக 27 ஓட்டங்களை சேர்த்தாலும், திடீரென ஏற்பட்ட வியத்தகு சரிவால், பாபர் அசாம் (0) மற்றும் தலைவர் சல்மான் அலி ஆகா (1) உட்பட மூன்று முக்கியமான விக்கெட்டுகளை விரைவாக இழந்தனர்.
10 ஆவது ஓவரில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தனர்.
சிம்பாப்வே அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பு இருந்த போதிலும், ஃபகார் ஜமான் மற்றும் உஸ்மான் கான் ஆகியோர் பாகிஸ்தானின் எழுச்சிக்காகப் போராடினர்.
இந்த ஜோடி 39 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்து முக்கியமான இணைப்பாட்டத்தைப் பகிர்ந்து கொண்டது.
பின்னர், சிம்பாப்வே ஃபகாரை வீழ்த்த முடிந்தாலும் உஸ்மான் கான், நவாஸுடன் மற்றொரு முக்கியமான இணைப்பாட்டத்தை உருவாக்கி வெற்றி இலக்கை நோக்கி வழிநடத்தினார்,
இதனால், பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
முத்தரப்பு தொடரின் அடுத்த போட்டியில் சிம்பாப்வே நவம்பர் 20 அன்று அதே மைதானத்தில் இலங்கையை எதிர்கொள்ளும்.



















