பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
அதேநேரம், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலின் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துணை இராணுவக் கட்டிடத்தின் பிரதான வாயிலில் இரண்டு குண்டுவெடிப்புகளுடன் தாக்குதல் தொடங்கியது.
ஆயுதமேந்திய நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது.
துணை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகள் பதிலடி கொடுத்து, வளாகத்திற்குள் இருந்த மூன்று தாக்குதல்காரர்களை சுட்டுக் கொன்றனர்.
இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைக்காக பெஷாவரில் உள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.



















