பஹல கடுகன்னாவையில் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கேகாலை மாவட்ட செயலாளர், மாவனெல்ல பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) ஆகியவற்றிடம் சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டவுடன் வீதியை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் NBRO இன் மூத்த புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக தெரிவித்தார்.
எனினும், தொடர்ந்து நிலவும் பாதகமான வானிலை பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.














