ஒரு ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய மறுத்த கிறிஸ்தவ இராணுவ அதிகாரியின் பணிநீக்கத்தை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (25) உறுதி செய்தது.
இராணுவம் ஒரு மதச்சார்பற்ற நிறுவனம் என்றும் அதன் ஒழுக்கத்தை சமரசம் செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
ஆலயத்திற்குள் நுழைய கட்டாயப்படுத்தப்பட்டது அவரது மத சுதந்திரத்தை மீறுவதாக வாதிட்டு, அதிகாரி தனக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் நீதிமன்றம் அவரது நடத்தை சட்டப்பூர்வமான கட்டளையை மீறுவதற்கு சமம் என்று தீர்ப்பளித்தது.
அதிகாரி சாமுவேல் கமலேசன் பணிநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்ற உத்தரவை இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு உறுதி செய்தது.














