டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியதில் பெண் உட்பட 4 பேர் உயிரிந்துள்ளனர்.
டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீரென தீப்பற்றியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள காலணி விற்பனை செய்யும் கடையில் இருந்தே தீ பரவல் ஆரம்பித்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதேவேளை, தீப்பற்றியதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














