லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசன் 2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
முதலில் 2025 டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறாவது சீசனுக்கான புதிய திகதிகள் இறுதி செய்யப்பட்டன.
2026 பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை நடத்தும் இடங்களை முன்கூட்டியே ஆயத்தம் செய்வதற்கான பரந்த தேவையை கருத்தில் கொண்டு இந்த ஒத்திவைப்பு செய்யப்பட்டது.
இந்த முடிவின் மூலம், இலங்கையின் சிறந்த உள்நாட்டு டி20 போட்டியான ஐந்து அணிகள் கொண்ட போட்டி, முந்தைய பல சீசன்களைப் போலவே, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மீண்டும் தொடங்கும் என்று SLC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.




















