தற்போதைய பேரிடர் நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களைத் தடுக்க முந்தைய அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளுக்கு இதன்போது முன்னாள் ஜனாதிபதி விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் முந்தைய இயற்கை பேரழிவுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
2003 மற்றும் 2016 வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்திற்குப் பிந்தைய காலம் குறித்து இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் கூறினார்.














