• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் சஹாரா புழுதி: கண்கவர் வானமும் ‘இரத்த மழை’யும் இணைந்து பிரித்தானியாவில் நிகழவுள்ள அதிசயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/04
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் வான்பரப்பில் சஹாரா பாலைவனப் புழுதி படரவுள்ளதால், இந்த வார இறுதியில் கண்கவர் சூரிய அஸ்தமனங்களையும், ‘இரத்த மழை’ (Blood Rain) எனப்படும் அபூர்வ நிகழ்வையும் மக்கள் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து கிளம்பிய நுண்மணல் மற்றும் தாதுப் பொருட்கள் அடங்கிய ஒரு பாரிய புழுதிப் படலம், வெப்பமான தெற்கு காற்று நீரோட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து பிரித்தானியாவை வந்தடையவுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவிய ‘ரெஜினா’ (Regina) புயல் காரணமாக இந்தப் புழுதி வளிமண்டலத்தின் மேல் அடுக்குக்குத் தள்ளப்பட்டு, தற்போது பிரித்தானியாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன்போது வளிமண்டலத்தில் தங்கியிருக்கும் இந்த நுண் துகள்கள் சூரிய ஒளியைச் சிதறடிப்பதன் மூலம், வானத்தை அடர் தங்கம், அம்பர் மற்றும் செம்மஞ்சள் நிறங்களில் மாற்றும்.

குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது வானம் மிகவும் அழகாகவும், ஒரு மாயாஜாலத் தோற்றத்துடனும் காட்சியளிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இந்தத் தாக்கம் அதிகமாக இருக்கும்.

வளிமண்டலத்தில் உள்ள இந்தப் புழுதித் துகள்கள் மழையுடன் சேரும்போது, அவை நிலத்திற்கு வரும்போது சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் விழும்.

இதுவே ‘இரத்த மழை’ என அழைக்கப்படுகிறது. இந்த மழை பெய்து ஓய்ந்த பின்னர் , கார்கள், ஜன்னல்கள் மற்றும் தோட்டத் தளபாடங்கள் மீது ஒரு மெல்லிய செந்நிறப் படிவம் படிந்திருப்பதைக் காணலாம்.

‘இரத்த மழை’ என்ற பெயர் அச்சமடைய செய்வதாக இருந்தாலும், இது முற்றிலும் இயற்கையானது மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது.

இது ஒரு ஒப்பனை ரீதியான (Cosmetic) பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்.

இந்த வார இறுதியில் நிலவவுள்ள வசந்தகால வெப்பநிலையுடன் இணைந்து இந்தப் புழுதிப் படலம் வருவதால், பிரித்தானியா முழுவதும் ஒரு மிதமான சூழல் நிலவும்.

சஹாரா புழுதி பிரித்தானியாவிற்கு வருவது இது முதல் முறையல்ல ஒவ்வொரு ஆண்டும் சில முறை இத்தகைய நிகழ்வுகள் நடப்பது வழக்கமானது என்பதுடன் இது உலகளாவிய வானிலை அமைப்புகள் எவ்வளவு தூரம் பிணைக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஒரு நினைவூட்டலாக அமைகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்டார்மர் ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சில் அல்ல – பிரித்தானிய பிரதமரை கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப் !

Next Post

பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

Related Posts

பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

2026-03-04
ஈரான் மீதான டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்!
இங்கிலாந்து

ஸ்டார்மர் ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சில் அல்ல – பிரித்தானிய பிரதமரை கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப் !

2026-03-04
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-03-04
தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு நோய் அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

2026-03-04
மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-04
Next Post
பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

பிரிட்ஜெண்ட் (Bridgend) கவுண்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

0
பிரித்தானியாவில் சஹாரா புழுதி: கண்கவர் வானமும் ‘இரத்த மழை’யும் இணைந்து பிரித்தானியாவில் நிகழவுள்ள அதிசயம்!

பிரித்தானியாவில் சஹாரா புழுதி: கண்கவர் வானமும் ‘இரத்த மழை’யும் இணைந்து பிரித்தானியாவில் நிகழவுள்ள அதிசயம்!

0
ஈரான் மீதான டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்!

ஸ்டார்மர் ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சில் அல்ல – பிரித்தானிய பிரதமரை கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப் !

0
மட்டுவில் 8 பேர் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

0
காணமல் போயுள்ள குடும்பப் பெண்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.