நவகம்புற கணேசின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் நடத்தப்பட்டது. இதன் போது இலங்கையின் பல்வேறு, இசைத்துறை, நடிப்பு மற்றும் ஆடல் பாடல் கலைஞர்களும் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலினை நிகழ்த்தியிருந்தார்கள்.
இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் “மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி” என்ற பாடல் மிகவும் பிரபல்யமடைந்த பாடலாகும்.
இவர் சிறிது காலம் சுகவீனமுற்று தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரை, கொழும்பு பிரதேச செயலகம் அண்மையில் நடத்திய சாஹித்திய விழாவில் கொழும்பு கலாச்சார சங்கம் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.












