அண்மைய வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கடுவலையில் இருந்து பத்தரமுல்ல வரையிலான வீதி, பொதுப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, கடுவலை நகரம் முற்றிலுமாக நீரில் மூழ்கியது.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த அதுருகிரிய நுழைவாயில் நேற்று (02) மீண்டும் திறக்கப்பட்டது.
அதன்படி, அந்த நுழைவாயில் வழியாக பயணம் செய்வது இப்போது மீண்டும் சாத்தியமாகும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.













