அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் அனுபமா நடித்துள்ள திரைப்படம் லொக்டவுன்.
இத் திரைப்படத்தில் நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதி படம் வெளியாகவுள்ள நிலையில் இப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தணிக்கைக் குழு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
















