அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) நைனா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் இன்று (05) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து மொஹமட் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரினால் நைனா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிரின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













