(Gateshead) கேட்ஸ்ஹெட் பகுதியில் இளம் பெண்களை இலக்குவைத்துச் செயல்பட்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய குழுவுக்கு க்ரோவ்ண் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ருமேனிய மற்றும் அல்பேனிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆறு சிறுமிகளை 2014 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில் பாலியல் ரீதியாகச் சுரண்டியதற்காகக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மது மற்றும் கோகைன் கொடுக்கப்பட்டு, அவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர் ஒருவர் அளித்த அறிக்கையை ‘திகிலூட்டுவதாக’ தெரிவித்த நீதிபதி அது அந்தச் சிறுமியின் ஆழமான மன அதிர்ச்சி மற்றும் உளவியல் காயத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளும் இந்தச் சிறுமிகளின் துணிச்சலையும் கண்ணியத்தையும் பாராட்டி, இத்தகைய கொடுமையான குற்றங்கள் இவர்களின் குழந்தைப் பருவத்தைப் பறித்துவிட்டதாகக் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இந்த குற்றத்துடன் தொடர்புடைய நபர்கள் நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு 18 மாதங்கள் முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.














