மன்னர் சார்லஸ் தனது புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் அடுத்த ஆண்டு தனது சிகிச்சை குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, (Stand Up To Cancer) ஸ்டாண்ட் அப் டு கேன்சர் பிரச்சாரத்திற்கு ஆதரவாக ஒரு தொலைக்காட்சி உரையின் மூலம் வெளியிடப்பட்டது.
மேலும் இது புற்றுநோய் பரிசோதனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
தனது தனிப்பட்ட அனுபவத்தின் மூலம், ஆரம்பகால நோயறிதல் உயிர்களைக் காப்பாற்றும் என்பதை வலியுறுத்தி, கிடைக்கக்கூடிய பரிசோதனைகளை தவறவிட்ட ஒன்பது மில்லியன் மக்கள் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.
பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையை வெளியிட்டு, மன்னர் சிகிச்சைக்கு விதிவிலக்காக சிறப்பாக பதிலளித்ததாகவும், அவரது நடவடிக்கைகள் இப்போது முன்னெச்சரிக்கை கட்டத்திற்கு நகரும் என்றும் உறுதிப்படுத்தியது.
இதேவேளை, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த காணொளி செய்தியை “ஒரு சக்திவாய்ந்த செய்தி” என்று பாராட்டியதுடன் மேலும் “புத்தாண்டில் அவரது புற்றுநோய் சிகிச்சை குறைக்கப்படும் என்பதில் நான் முழு நாடு சார்பாகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
















