பிரித்தானியா முழுவதும் வாகன சாரதி தேர்வுக்கான காத்திருப்பு காலத்தை ஏழு வாரங்களாகக் குறைப்பதற்கான இலக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என நாட்டின் பொதுச் செலவு கண்காணிப்பு அமைப்பின் அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.
நீண்ட கால தாமதம் காரணமாக, சுமார் மூன்றில் ஒரு பங்கினர் தேர்வு இடத்தைப் பெறுவதற்காக மூன்றாம் தரப்பினருக்கு 500 பவுண்ட்ஸ் வரை பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொவிட் கட்டுப்பாடுகளால் நிலுவையில் இருந்த தேர்வுகள் கணிசமாக மோசமடைந்தன, இதனால் 2020/21 நிதியாண்டில் 1.1 மில்லியன் தேர்வுகள் நடத்தப்படுவது தடுக்கப்பட்டது.
இந்த தேர்வுகளில் 360,000 முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கிரேட் பிரிட்டனில் கடந்த செப்டம்பரில் ஒரு தேர்வுக்காக கல்வி பயில்பவர்கள் சராசரியாக 22 வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
இது கொவிட் தாக்குதலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் குறிப்பாக 2020 பெப்ரவரியில் சுமார் ஐந்து வாரங்களாக இருந்தது.
இந்த நிலையில் சராசரி வாகன சாரதி தேர்வுக்கான காத்திருப்பு நேரத்தை ஏழு வாரங்களாகக் குறைக்கும் இலக்கை 2027 நவம்பர் வரை அடைய முடியாது என்று வாகன ஓட்டுநர் மற்றும் வாகன தரநிலைகள் நிறுவனம் கூறியுள்ளது.














