நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்தின் பணவீக்க விகிதம் எதிர்பார்த்ததை விட 3.2 சதவீதமாகக் ஆகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளி விபரவியல் அலுவலகம் இன்று (17) தெரிவித்துள்ளது.
இது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 3.6% ஆக காணப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத பண வீக்கத்தின் இந்த சரிவானது வியாழக்கிழமை (18) நடைபெறும் இங்கிலாந்து வங்கியின் கூட்டத்தில், வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளை வலுப்படுத்தியுள்ளது.
தேசிய புள்ளி விபரவியல் அலுவலகம் (ONS) இன்று வெளியிட்ட தகவல்களின்படி, நுகர்வோர் விலை பணவீக்கம் எதிர்பார்த்ததை விடக் கடுமையாகக் குறைந்துள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் பரவலாக வீழ்ச்சியை எதிர்பார்த்திருந்தனர் – குறிப்பாக பலர் பணவீக்கம் 3.5% ஐ நெருங்கும் என்று கணித்தனர்.
எவ்வாறெனினும், உணவு மற்றும் பானங்களின் விலைகள் பலவீனமடைந்ததால் நவம்பர் மாதத்திற்கான பணவீக்கம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2025 ஒக்டோபர் வரையிலான மூன்று மாதங்களில் இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்திய ஒரு நாள் கழித்து நவம்பர் மாத பணவீக்க விபரம் வெளிவந்துள்ளது.















