பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை கடந்த நவம்பர் மாதம் மேலும் மோசமடைந்த நிலைக்குச் சென்றதாக வேலைவாய்ப்பு தேடல் வலைத்தளமான அட்சுனா (Adzuna) இன்று கூறியது.
இது இங்கிலாந்து வங்கி எதிர்கொள்ளும் இக்கட்டான நிலையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
அட்சுனா வலைத்தளத்தின் தகவலின்படி,
2025 நவம்பர் மாதம் வரையிலான கடந்த 12 மாதங்களில் ஆன்லைன் வேலை விளம்பரங்கள் 15.2 சதவீதம் குறைந்துள்ளன – இது 2025 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவாகும்.
கடந்த ஆண்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் முதல் பட்ஜெட்டில் ஏப்ரல் மாதத்தில் அதிக சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பிரித்தானிய முதலாளிகள் பணியமர்த்தல் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.
இந்த நிலையில், நவம்பர் மாத இறுதியில் ரேச்சல் ரீவ்ஸின் இரண்டாவது பட்ஜெட்டில் மேலும் வரி அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் வேலைவாய்ப்புச் சந்தையையும் பாதித்துள்ளன.
இது ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் பிரித்தானிய வேலையின்மையை 5.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது – இது 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னரான மோசமான நிலையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நவம்பர் மாதத்தில் தொழிலாளர் சந்தை மோசமடைந்தாலும், ஊதிய வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் அட்சுனா வலைத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, விளம்பரப்படுத்தப்பட்ட சம்பளம் ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்தை விட 7.7 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பத்தில் பெரிய அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு துறைகளில் மட்டுமே ஊதியம் சரிந்துள்ளதாகவும், இது ஒரு மாதத்திற்கு முன்பு 7.3 சதவீதமாக இருந்ததாகவும் வேலைவாய்ப்பு தேடல் வலைத்தளம் கூறியுள்ளது.
இதேவேளை, பொருளாதாரம் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலாந்து வட்டி விகிதங்களைக்

















