குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெனிசுலா எண்ணெயை தனிமைப்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அமெரிக்க இராணுவப் படைகளுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது.
வொஷிங்டன் தற்போது கராகஸுக்கு அழுத்தம் கொடுக்க இராணுவ வழிமுறைகளை விட பொருளாதார வழிகளைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவுக்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் ஜனவரி மாத இறுதியில், வெனிசுலா அமெரிக்காவிற்கு குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்க ஒப்புக் கொள்ளாவிட்டால் பொருளாதார பேரழிவை எதிர்கொள்ளும் என்று நம்பப்படுகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் நுழைவதற்கு பிரதான மார்க்கமாக உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
மேலும், ட்ரம்பின் நிர்வாகம் பல மாதங்களாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கூறி தென் அமெரிக்காவில் இருந்து வரும் படகுகள் மீது குண்டுவீச்சு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பல நாடுகள் இந்தத் தாக்குதல்களை நீதிக்குப் புறப்பானவை என்று விமர்சித்துள்ளன.
இந்த மாதம் இதுவரை, அமெரிக்க கடலோர காவல்படை வெனிசுலா கடற்பரப்பில் இரண்டு எண்ணெய்க் கப்பலை இடைமறித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















